search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கீர்த்தி பாண்டியன்"

    தமிழ் சினிமாவில் கமல், சரத்குமார், அர்ஜுன் ஆகியோரின் மகள்களை தொடர்ந்து, பல நடிகர்களின் மகள்கள் அறிமுகமாக இருக்கிறார்கள். #Kamal #Sarathkumar
    சினிமாவில் அறிமுகமாக வாரிசு என்ற பின்புலம் உதவியாக இருக்கும். ஒரு நடிகரின் மகன் வாரிசாக அறிமுகமானால் அந்த நடிகரை மனதில் வைத்து வாரிசு நடிகரிடமும் எதிர்பார்ப்பு ஏற்படும். மகனை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பும் சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் தங்கள் மகள்களை வாரிசுகளாக அறிமுகப்படுத்தவோ படங்களில் நடிக்க வைக்கவோ யோசிப்பார்கள்.

    தற்போது அந்த நிலை மாறிவருகிறது. தமிழ் சினிமாவை வாரிசு நடிகைகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். கமல்ஹாசனின் மகள்கள் சுருதி ஹாசன், அக்‌‌ஷரா ஹாசன், ராதா மகள்களான கார்த்திகா, துளசி, சரத்குமார் மகள் வரலட்சுமி, அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, ரவிசந்திரனின் பேத்தி தான்யா, மேனகா சுரேஷ் மகள் கீர்த்தி சுரேஷ் என கடந்த 5 ஆண்டுகளில் ஏராளமான வாரிசு நடிகைகள் அறிமுகமாகியுள்ளனர்.



    தற்போது இந்த வரிசையில் இயக்குனர் பிரியதர்‌ஷனின் மகள் கல்யாணி பிரியதர்‌ஷன், நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தியும் இணைந்துள்ளனர். கல்யாணி பிரியதர்‌ஷன் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மித்ரன் இயக்கும் படத்தில் அறிமுகமாகிறார். கீர்த்தி அருண் பாண்டியன் புதுமுகம் தர்‌ஷனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கும் அருண் பாண்டியனின் மகள், புதிய படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்க இருக்கிறார். #ArunPandian #Keerthi
    நடிகர் மற்றும் தயாரிப்பாளராக இருப்பவர் அருண் பாண்டியன். இவருடைய மகள் கீர்த்தி, கனா புகழ் தர்ஷன் நடிக்கும் பேண்டஸி படத்தின் மூலம் கதாநாயகியாக களமிறங்க இருக்கிறார். 

    இது குறித்து நடிகை கீர்த்தி பாண்டியன் கூறும்போது, "பல பெரிய வெற்றிப் படங்களை நான் புறக்கணித்து வந்திருக்கிறேன். அந்த நாயகி கதாபாத்திரங்களை புறக்கணித்ததில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை, ஏனெனில் அந்த கதாப்பாத்திரங்களில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கான சிறப்பான விஷயங்கள் ஏதும் இல்லை" என்கிறார்.

    மேலும், "நான் எங்கிருந்து வந்தேன், என் பின்னணி என்ன என்பதை வெளியில் காட்ட விரும்பவில்லை. நான் பல ஆடிஷன்களில் கீர்த்தி என்ற பெயரில் கலந்து கொண்டிருக்கிறேன், அவைகளில் நிராகரிக்கப்பட்டும் இருக்கிறேன். நான் நிராகரித்த சில படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன. நான் ஒரு நல்ல நடிகை என்ற பெயரையே பெற விரும்புகிறேன். நடிப்பின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள மேடை நாடகங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்" என்றார். 



    இவர் கடந்த 5 ஆண்டுகளாக தனது தந்தையான அருண் பாண்டியனுடன் விநியோகத் தொழிலில் உதவியாக இருந்தார். சிங்கப்பூரில் சொந்தமாக விநியோக நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

    கீர்த்தி பாண்டியன் நடிப்பு திறனையும் தாண்டி, சிறந்த சல்சா மற்றும் பாலே நடன கலைஞராகவும் உள்ளார். 
    ×